புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தசை வளர்ச்சியிலிருந்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் வரை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
புரதத்தை போதுமான அளவு உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொண்டால், நீங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்.
வயது, பாலினம் மற்றும் உடல் வகையைப் பொறுத்து புரத உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. நம் உடலின் ஒவ்வொரு கிலோகிராமிலும் 1 கிராம் புரதம் தேவை உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக புரதத்தை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் உடல் உறுப்புகளை மோசமாக பாதிக்கலாம்.
இரத்தத்தில் அதிகப்படியான புரதம் இருந்தால், சிறுநீரகங்கள் அதை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது காலப்போக்கில் அவற்றை சேதப்படுத்தும். அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொள்வது செரிமான அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மேலும், வயிற்றுப்போக்குக்கும் வழிவகுக்கும்.
புரதத்தை ஜீரணிக்க உடலுக்கு நிறைய தண்ணீர் தேவை. அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும் நீரின் அளவை அதிகரிக்கும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
அதிக புரதம் சாப்பிடுவதால், சிறுநீரில் கால்சியம் அதிகமாக வெளியேறி, இதனால் கால்ஷியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். காலப்போக்கில், இது எலும்புகளை பாதித்து குறிப்பாக ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தில் உள்ளவர்களிடம், இது எலும்பு இழப்பை ஏற்படுத்தும்.
அதிக புரதத்தை உட்கொள்வது தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால், அதிக புரதம் காரணமாக தசைகளில் நீரிழப்பு ஏற்படலாம். இது தசைப்பிடிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
உடல் எடை குறைய புரதம் தேவை என்றாலும், அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்கும். ஒரு ஆய்வின் படி, அதிகப்படியான புரதம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது உடலில் உள்ள அமினோ அமிலங்களையும் அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.