Fatty Liver பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த காய்கறிகளை கண்டிப்பா சாப்பிடுங்க

Fatty Liver: கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, உடலின் மற்ற பகுதிகளுக்கு சுத்தமான இரத்தத்தை வழங்குகிறது. உடலின் இந்த முக்கியமான பாகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், காரமான உணவுகள், நெய், வெண்ணெய், கிரீம் பால் மற்றும் மட்டன் போன்ற சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு அதிகரிக்கும். 

இந்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான சில காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால், கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும். உங்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை இருந்தால், சில ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

1 /4

ப்ரோக்கோலியை உட்கொள்வதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். ப்ரோக்கோலி கல்லீரல் கொழுப்பை விரைவாகக் கட்டுப்படுத்தும் காய்கறிகளில் ஒன்றாகும். தினசரி உணவில் இந்த காய்கறியை சாலடாக பயன்படுத்தலாம்.  

2 /4

பூண்டில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டுப் பொடியைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் கொழுப்பைக் குறைக்கலாம் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பூண்டை உட்கொள்வதால் கல்லீரல் கொழுப்பு எளிதில் குறைகிறது.

3 /4

பாகற்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் கொழுப்பை குறைக்கலாம். பாகற்காய் சாறு தயாரித்து குடிக்கலாம். காய்கறியாகவும் பயன்படுத்தலாம்.  

4 /4

தக்காளி பெரும்பாலும் சமையலில் மற்றும் சாலட் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு வலுவான ஆண்டிஆக்சிடெண்டாகும், அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள் இதில் உள்ளன. இது கொழுப்பு கல்லீரல் நோய், வீக்கம் மற்றும் பல வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. (பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)