குஜராத் அகமதாபாத்தில் நேற்று (பிப். 1) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் டி20 சதம். இதன்மூலம், 3 ஃபார்மட்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
இந்த புகைப்படத் தொகுப்பில், 3 ஃபார்மட்களிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஓப்பனர் சுப்மன் கில் டெஸ்டில் ஒன்று, ஒருநாள் அரங்கில் 4, டி20 அரங்கில் ஒன்று என 6 சதங்களை அடித்துள்ளார்.
இதுவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்டில் 27, ஒருநாள் அரங்கில் 46, டி20யில் ஒன்று என 74 சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல் டெஸ்டில் 7, ஓடிஐயில் 5, டி20யில் 2 என 14 சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் ஓய்வுபெற்ற வீரர் சுரேஷ் ரெய்னா, டெஸ்டிலும், டி20யிலும் தலா 1 சதத்தையும், ஓடிஐயில் 5 சதங்களையும் அடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் டெஸ்டில் 8, ஓடிஐயில் 30, டி20யில் 4 என 42 சதங்களை அடித்துள்ளார்.