வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN இணைப்பை விட வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதியை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான்.
பொதுவாக வாங்கிய புதிதில் இருக்கும் வைஃபையின் வேகம் போகப்-போக குறையலாம். இதற்கு, முறையான பராமரிப்பு இன்மை ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.
வைஃபை இன்டர்நெட் வேகம் சிறப்பாக இருக்க, வைஃபை ரூட்டரை முறையாக பயன்படுத்துவது அவசியம். உங்கள் வைஃபை சிறப்பான இணைய வேகத்தை கொடுப்பதற்கான சில டிப்ஸ்களை தான் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ரவுட்டர் என்னும் திசைவி திறந்த பகுதியில், உயரமான இடத்தில் வைக்க முயற்சிக்கவும். முடிந்தால், உலோகப் பொருட்களிலிருந்து விலக்கி வைக்கவும்.
வைஃபை கருவி, காகிதம், அட்டை துணி போன்ற ஏதேனும் ஒரு பொருளினால் மூடப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக சிக்னலை சரியாக அனுப்ப முடியாமல் வைஃபை வேகம் பாதிக்கப்படும்.
ஆண்டெனா: உங்கள் ரூட்டரில் வெளிப்புற ஆண்டெனாக்கள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வது சிக்னல் தரத்தை மேம்படுத்தலாம். அவற்றை செங்குத்தாக வைக்க முயற்சிக்கவும்.
உங்கள் வைஃபை கருவியை பல நாட்களுக்கு ரீஸ்டார்ட் செய்யவில்லை என்றால், அது இணைய வேகத்தை பாதிக்கலாம். ரீஸ்டார்ட் செய்வது சிக்னல் வலிமையை மேம்படுத்துகிறது.
வைஃபை சிறந்த முறையில் செயல்பட, உங்கள் வைஃபை கருவியை உங்கள் தேவைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் வீடு முழுவதிலும் நல்ல இணைய இணைப்பைப் பெறுவீர்கள்
உங்கள் ரூட்டரின் ஃபார்ம்வேர் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். உற்பத்தியாளரின் வலைத்தளத்திலிருந்து புதுப்பிப்புகளைப் பதிவிறக்கி நிறுவவும். அதனை அப்டேட் செய்வது மிக முக்கியம்.
இண்டெர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் இணைய சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு, உங்கள் திட்டத்தை மேம்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.