Gold Offer: தங்கம் வாங்கினால் ரூ. 3,000 கேஷ்பேக் கிடைக்கும்! முழு விவரம்!

Gold Offer: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் பயனர்களுக்கு பல ஆபர்களை வழங்கி உள்ளது PhonePe.

 

1 /6

PhonePe நிறுவனம் 490 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும், 36+ மில்லியன் வணிகர்களையும் கொண்டுள்ளது. இதன் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 99 சதவீதம் அரை தனது சேவைகளை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தி வருகிறது.    

2 /6

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது மட்டும் இல்லாமல், PhonePe இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் மற்றும் கடன் வழங்குதல் போன்ற பிற நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.    

3 /6

தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24K தங்கம் வாங்கினால் அதற்கேற்ப கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது PhonePe. இந்த ஆப் மூலம் 1000 ரூபாய்க்கு டிஜிட்டல் தங்கத்தை வாங்க வேண்டும்.    

4 /6

அப்படி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3000 ரூபாய் வரை உத்தரவாதமான கேஷ்பேக்கை வழங்குகிறது PhonePe.    

5 /6

இந்த சலுகை வரும் நவம்பர் 9 முதல் நவம்பர் 12 வரை மட்டுமே இருக்கும். குறைந்த பட்சம் 1000 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை ஒருமுறை மட்டும் செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.   

6 /6

PhonePeன் இந்த கேஷ்பேக் சலுகையை பெற, ஆப்பிற்குள் சென்று Wealth என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Gold - Buy One Time - Buy in rupees என்பதை கிளிக் செய்யவும். முழுவதும் சரிபார்த்த பின்பு, 'Proceed to Pay' என்பதைக் கிளிக் செய்யவும்.