சுக்கிரன் மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்வில் ஜாக்பாட்: பண மழை பொழியும்

Venus Transit 2023: கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இதனால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. செல்வம், ஆடம்பரம், அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளார். ஜனவரி 17 முதல் கும்ப ராசியில் சனியும் பெயர்ச்சியாகியுள்ளார். சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால், கும்ப ராசியில் சனி - சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது.

 

1 /6

சுக்கிரன் பிப்ரவரி 15 வரை கும்பத்தில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த மாற்றத்தின் அதிகப்படியான தாக்கத்தை அனுபவிப்பார்கள். அடுத்த 23 நாட்களுக்கு சுக்கிரனின் அருளால் 5 ராசிக்காரர்களுக்கு பணமும், மகிழ்ச்சியும், அன்பும் மிக அதிகமாக கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /6

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.

3 /6

மிதுன ராசியினருக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம். செயல்களில் வெற்றி உண்டாகும். மதம் சார்ந்த, குறிப்பாக ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.

4 /6

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் நன்மைகள் உண்டாகும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலியின் காதலில் மூழ்கி விடுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும். இந்த காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம்.

5 /6

சுக்கிரனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு அதிக பண வரவை அளிக்கும். திடீர் லாபம் உண்டாகும். இது உங்களின் பல பிரச்சனைகளை நீக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் கூடும். காதல் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

6 /6

சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசியில்தான் நடைபெறுகிறது என்பதால், இந்த ராசிக்காரர்கள் உச்சபட்ச பலன்களைப் பெறுவார்கள். அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

You May Like

Sponsored by Taboola