Sani Vakra Nivarthi: நீதியின் கடவுளான சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்தார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கும்பத்தில் சனியின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து 12 ராசிகளின் நிதி, தொழில், ஆரோக்கியம், குடும்பம் மற்றும் சமூக நிலை ஆகியவற்றில் சனியின் வக்ர நிவர்த்தி பெரிய சுப மற்றும் அசுப தாக்கத்தை ஏற்படுத்தும். சனியின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன என இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். ராசிகளில் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவரது தாக்கமும் அதிகமாகவே இருக்கின்றது.
சனி வக்ர நிவர்த்தி: நீதியின் கடவுளான சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ராசிகளில் தாக்கம்: சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சுப விளைவுகளையும் சில ராசிகளுக்கு அசுப விளைவுகளையும் அளிக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். சுற்றுலா செல்லக்கூடும். மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
துலாம்: சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு விரும்பிய பலன்களைத் தரப்போகிறது. தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. காதல் திருமணத்திற்கு இது நல்ல நேரம்.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இப்போது சுமுகமாக தீரும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வேலை அல்லது வியாபாரம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உள்ளது. பயணத்தின் போது கவனமாக இருந்து வாகன விபத்துகளைத் தவிர்க்கவும்.
தனுசு: சனியின் வக்ர நிவர்த்தி தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். வேலை மற்றும் வணிகக் கண்ணோட்டத்தில் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். எதிரிகளும் உதவ முன்வருவார்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த காலம் அனைத்திலும் வெற்றியைத் தரும்.
கும்பம்: கும்ப ராசியில்தான் சனியின் வக்ர நிவர்த்தி நிகழ்ந்துள்ளது. ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். ஆனால் நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் தவறை செய்ய வேண்டாம். அனைத்து பணிகளிலும் முழு நேர்மையை கடைபிடித்தால் வெற்றியும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன்ன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.