Green Tea-யா இருந்தாலும், இந்த நேரத்தில் குடிச்சா பிரச்சனைதான்

கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிரீன் டீ ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த உதவும். கல்லீரல் நோய்கள் முதல் வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், அல்சைமர் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நோய்களைத் தடுக்க கிரீன் டீ உதவும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. 

 

1 /4

கிரீன் டீ பலரின் விருப்பமாக மாறியதால், பலர், அவர்களுக்கு தோன்றும்போதெல்லாம், கிரீன் டீயை குடிக்கிறார்கள். ஆனால் கிரீன் டீயை எப்போது குடிக்க வேண்டும், எப்போது குடிக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் அதனால் உடல்நலம் பெறுவதற்கு பதிலாக உடல்நலக் குறைபாட்டை வரவழைத்துக் கொள்வீர்கள்.

2 /4

கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ உட்கொண்டால், அது வயிற்றில் இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது வயிற்று வலி, மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.

3 /4

கிரீன் டீ செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் உணவோடு அல்லது உணவு முடிந்த உடனேயே கிரீன் டீ குடித்தால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது உடலுக்கு கடினமாக இருக்கும். மேலும் நீங்கள் உண்ணும் உணவின் பலன் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். 

4 /4

தூங்குவதற்கு முன் க்ரீன் டீ குடிக்க வேண்டாம் கிரீன் டீயில் இருக்கும் பல கூறுகள், உடலை நிதானப்படுத்த உதவுகின்றன. ஆனால் கிரீன் டீயில் காஃபின் இருப்பதால், படுக்க செல்லும் முன் அதை குடிக்க வேண்டாம். அப்படி குடித்தால், தூக்க ஹார்மோன் மெலடோனின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நல்ல உறக்கத்தை நீங்கள் இழக்க நேரிடும்.  (குறிப்பு: உங்கள் உணவு மற்றும் சுகாதாரம் தொடர்பான எந்தவொரு தீர்வை எடுப்பதற்கு முன்பும் எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும்.)