Guru Peyarchi 2025 Palangal: செல்வம், சந்தோஷம், செழிப்பு, திருமணம், குழந்தைகள், கல்வி என வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை அள்ளி வழங்கும் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிகளுக்கு கோடு நன்மைகளை அள்ளித் தரும்
கிரகங்களின் இயக்கம் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், சனி பகவான், குரு பகவனின் நிலைகளில் ஏற்படும் மாற்றம், அதன் பெயர்ச்சிகள், உருவாகும் யோகங்கள் பல வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், 2025 குரு பெயர்ச்சி யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது.
குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். இந்நிலையில், 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி அடைந்து, பிறகு மே மாதம் அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2025 பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் 2025 மே மாதத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்: 2025 ஆண்டின் குரு பெயர்ச்சி மற்றும் கஜ கேசரி யோகம் காரணமாக, மிதுன ராசியினர், இன்னல்கள அனைத்தும் நீங்கி இன்ப வாழ்வைப் பெறுவார்கள். அறிவுத்திறன் மற்றும் வேலைத்திறன் அதிகரிக்கும். நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நிதி ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் வெற்றியும், குடும்ப வாழ்க்கையில் இனிமையான அனுபவங்களும் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நற்பண்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கும்.
கன்னி: குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் வசதிகளும் வாய்ப்புகளும் உருவாகும். வேலை, கல்வி மற்றும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள், குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்ய அல்லது படிக்கத் திட்டமிடுபவர்களுக்கு, இந்த நேரம் சாதகமாக இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இணக்கமும் திருப்தியும் ஏற்படும்.
துலாம்: குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால், துலாம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையையும், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் பெறுவார்கள். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். வீடு, மனை வாங்கும் கனவுகள் நிறைவேறும். ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்பு அமையும். பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால், நிதி ஆதாயங்களைப் பெற்று, முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், மாமியார் மற்றும் உறவினர்களின் ஆதரவு இருக்கும். திருமணம் ஆகாதாவர்களுக்கு திருமண வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரத் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்: குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகம் குறிப்பாக கும்ப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். ஏழரை நாட்டு சனியின் கடைசிக் கட்டத்தைக் கடப்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைப் பெறுவார்கள். நிதி ஆதாயத்துடன், மகிழ்ச்சியும் கூடும். வேலையில், தொழிலில், கல்வியில் வெற்றி பெறுவீர்கள். சமயப் பணிகளிலும், ஆன்மிகச் செயல்களிலும் உள்ள ஆர்வம் நற்பண்புகளைத் தரும்.
கஜகேசரி யோகம்: சந்திரனும் வியாழனும் இணையும் போது கஜகேசரி யோகம் உண்டாகும். இது தவிர, நான்காவது, ஏழாவது அல்லது பத்தாம் வீட்டில் வியாழன் மற்றும் சந்திரன் கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், கஜகேசரி யோகம். 2025ல் மிதுனம் உள்ளிட்ட கன்னி, துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் உருவாகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.