HBD Alia Bhatt: சூப்பர் நடிகையாக பரிணமிக்கும் ஆலியா பட் பிறந்த நாள்...

பிரபல நடிகை ஆலியா பட் பிறந்த நாள் இன்று...  மார்ச் 15ஆம் தேதி பிறந்த ஆலியா, இன்று 29 வயதை எட்டினார். 2012 இல் கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமான பட்,  10 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், அவர் சிறப்பான படங்களில், திறமையாக நடித்து செய்து தனது அடையாளத்தை நிரூபித்துள்ளார்.

'ஹைவே' முதல் 'கங்குபாய் கத்தியவாடி' வரை: ஆலியாவை ஒரு சிறந்த நடிகையாக அடையாளம் காட்டிய சில கதாபாத்திரங்கள்...

1 /7

நிஜ வாழ்க்கையில் நகரத்தில் வளர்க்கப்பட்ட பெண், ஆலியா, ஒரு காலத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீராங்கனையாக ஆசைப்பட்ட பீஹாரி புலம்பெயர்ந்த தொழிலாளி 'உட்தா பஞ்சாப்' பௌரியாவாக நடித்து அசத்தினார். ஹைவேயில் ஆலியா ஏற்ற கதாபாத்திரத்தைப் போலவே இதுவும் கடினமான பாத்திரமாக இருந்தது, இதில் பாலியல் வன்முறைக்கு ஆளானவராக நடித்து அனைவரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் ஆலியா பட். (Photograph:Twitter)  

2 /7

அவர் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமானபோது, ​​அவர் ஒரு உளவாளியின் பாத்திரத்தை இவ்வளவு எளிதாக எடுப்பார் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மேக்னா குல்ஜாரின் 'ராஸி' பட், அமைதியான, வலிமையான, நெகிழ்ச்சியான செஹ்மத் என்ற பாத்திரத்தில் நடித்தார், அவர் 1971 போரில் இந்தியா வெற்றிபெற உதவுவதற்காக பாகிஸ்தானில் உள்ள ராணுவக் குடும்பத்திற்கு மருமகளான் பெண்ணின் கதை  ராசி. (Photograph:Twitter)

3 /7

2012 ஆம் ஆண்டு 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமான ஆலியாவின் இரண்டாவது படம் 'ஹைவே'. உணர்ச்சி ரீதியில் சவாலான பாத்திரம்  (Photograph:Twitter)

4 /7

ஜோயா அக்தரின் 'கல்லி பாய்' திரைப்படத்தில் ஆலியா தனது காதலனைப் பற்றி அதிகமாகப் பேசும் சஃபீனாவாக நடித்தார். உணர்ச்சிவசப்படும் கதாபாத்திரத்தில், ஆலியாவின் அற்புதமான நடிப்பை வெளிக் கொணர்ந்த திரைப்படம் குல்லி பாய்.  (Photograph:Twitter)

5 /7

'டியர் ஜிந்தகி' மூலம், ஆலியா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் கியாராவாக ஆலியா நடித்தார், அவர் தனது வாழ்க்கையில் அதிருப்தி அடைந்து, அதிலிருந்து வெளியே வர மனநல ஆலோசனை பெறுகிறார். மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கைப் பாடம், இந்தப் படம்.   (Photograph:Twitter)

6 /7

பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, ஆலியா பட் பாலியல் தொழிலாளி கங்குபாய் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். கதாபாத்திரத்திற்காக தனது உடல் மொழி முதல் பேசும் விதம் வரை அனைத்தையும் கற்று, அருமையாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற கங்குபாய் ஆலியா பட்...   1960 களில் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாதிபுராவின் மிகவும் சக்திவாய்ந்த, நேசிக்கப்பட்ட மற்றும் மதிக்கப்படும் பிரபலத்தின் கதை கங்குபாய் கதியவாடி (Photograph:Twitter)

7 /7

2012 இல் கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமான பட்,  10 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், அவர் சிறப்பான படங்களில், திறமையாக நடித்து செய்து தனது அடையாளத்தை நிரூபித்துள்ளார்.