FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பல வங்கிகளும், சிறு நிதி நிறுவனங்களும், NBFC நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர பல பொதுவாக FD திட்டங்களை வழங்குகின்றன. அவற்றில் எவை அதிக வட்டியை தருகிறது என்று பார்த்து பலரும் FD திட்டங்களில் முதலீடு செய்யும் பழக்கம் உள்ளது.

1 /8

மியூச்சுவல் ஃபண்டு என்னும் பராஸ்பர நிதியம் மற்றும் பிற முதலீட்டு திட்டங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது என்றாலும், FD திட்டங்களை பாதுகாப்பான முதலீடாக பலர் கருதுகின்றனர். பலரின் தேர்வாக எஃப்டி முதலீடுகள் இருப்பதற்கு இதுவே காரணம்.

2 /8

எஃப்டி முதலீடுகளை விரும்பும் பலரின் நம்பிக்கைக்கு கை கொடுக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கிலும், பல வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு FD வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

3 /8

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்திற்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4 /8

ஜூன் 10, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த வட்டி விகிதம் வெவ்வேறு காலகட்டங்களில் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்குமே பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 /8

ரூ. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி திருத்தியுள்ளது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது.  

6 /8

வங்கி FD மீதான வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒரு சில காலகட்டங்களுக்கான FDகளில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று, ஜூன் 10, 2024 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

7 /8

வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது.18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான முதலீட்டிற்கு கிடைக்கும்.  மூத்த குடிமக்களுக்கு  7.75 சதவீத வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீடுகளுக்கு பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்

8 /8

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான எஃப்டி முதலீடுகளுக்கு பொது மக்களுக்கு 7.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு  7.60 சதவீதம் என்ற அளவில் இருக்கும். 2 வருடங்கள் மற்றும் 2 ஆண்டுகள் 11 மாதங்களுக்கான எப்டி திட்டத்திற்கு பொது மக்களுக்கு 7.15 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு  7.65 சதவீதம் என்ற அளவில் வட்டி கிடைக்கும்.