Health Alert! நினைவாற்றலை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளை தவிர்க்கவும்

Eating Habits:  முதுமை, அதிக வேலை பளு அல்லது பிற உடல் பிரச்சனைகள் உங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது. அதே நேரத்தில், நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது. அதனால் அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

1 /5

இதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய முதல் விஷயங்கள் பேக் செய்யப்பட்ட ரெடி டு ஈட் வகை உணவுகள் மற்றும் குளிர்பானங்கள். இது உங்கள் நினைவாற்றலை மிகவும் பலவீனப்படுத்துகிறது.

2 /5

பேக்கேஜ் செய்யப்பட்ட ரெடி டு ஈட் உணவு வகைகள் மற்றும் இனிப்பு பானங்களில் உள்ள அதிக பிரக்டோஸ் உங்கள் நினைவாற்றலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் புரிந்துகொள்ளும் திறனை பாதிக்கும் மூளை வீக்கத்திற்கு வழிவகுக்கும். டயட் சோடா உங்கள் நினைவாற்றலை சேதப்படுத்தும் கூறுகளைக் கொண்டுள்ளது அதனால் எச்சரிக்கை தேவை.

3 /5

துரித உணவு மூலம், நீங்கள் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்கிறீர்கள். இது அல்சைமர் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் புரிந்துகொள்ளும் திறனையும் இது பாதிக்கிறது. இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் உங்கள் மூளையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். Brain-Derived Neurotrophic Factor என்னும் மூலக்கூறுகளின் உற்பத்தியை பாதிக்கின்றன. இது மூளை வளர்ச்சியை பாதிக்கிறது

4 /5

ஆல்கஹால் குடிப்பது, உங்கள் மூளையை இரண்டு விதத்திலும் பாதிக்கிறது. இது உடலில் உள்ள வைட்டமின் பி 1 ஐக் குறைக்கிறது. எனவே இது மூளை வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகிறது. இது நரம்பியக்கடத்திகளை அழிக்க வழிவகுக்கிறது . எனவே நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது.

5 /5

நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய விஷயங்களில் ஒமேகா 3 நிறைந்த உணவு சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும். அவை மூளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் சுரப்பை அதிகரித்து, மூளையை  பாதுகாக்கிறது.