இதெல்லாம் சத்தான உணவுகள் இல்லையா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நாம் சத்தான உணவுப்பொருட்கள் என்று நம்பி சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் உண்மையாகவே நமக்கு ஆரோக்கியத்தை தருவது இல்லை.

 

1 /5

தயிர் உடலுக்கு நல்லது தான், ஆனால் மனமூட்டப்பட்ட சில தயிர்கள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.  அவ்வாறு செயற்கை சுவையூட்டப்பட்ட தயிர்கள் அதிக இனிப்புசுவையை கொண்டிருக்கின்றன.  

2 /5

கடைகளில் விற்கப்படும் புரோட்டின் பானங்கள் நமது உடலுக்கு வலு சேர்க்கும் என நினைத்து வாங்கி பருகுகிறோம்.  ஆனால் அவற்றிலெல்லாம் செயற்கையான நிறமிகள் தான் சேர்க்கப்பட்டு இருக்கின்றன, இது உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது.  

3 /5

சாலட் வகைகள் உடலுக்கு நல்லது தான், ஆனால் பேக்கிங் செய்யப்பட்ட சாலட்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.  பேக்கிங் செய்யப்பட்ட சாலட்களில் அதிகளவு சோடியம் மற்றும் கொழுப்புகள் உள்ளன.  

4 /5

கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்களை நாம் ஆரோக்கியமானது என நினைத்து பயன்படுத்துகிறோம்.  உண்மையில் அவை இதயத்திற்கு நல்லதல்ல, இது  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து உடலை பாதிக்கிறது.  

5 /5

கொழுப்பு-நீக்கப்பட்ட உணவுகள் என கடைகளில் விற்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும், அதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டு இருக்கும், இது உடலை பாதிக்கிறது.