சிற்றுண்டி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பொரித்த உணவுகள். அதனால் உங்கள் எடையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல கடுமையான நோய்களையும் உண்டாக்கும். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட வேண்டும்.
இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்ட நிலையில், ஆரோக்கியமான தின்பண்டங்களை உட்கொள்வதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முளை கட்டிய தானியங்கள், புரத சத்து நார்ச்சத்து நிறைந்தது. இதனால் உடல் எடை குறைகிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.
நிலக்கடலை: நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உள்ள எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த வேக வைத்த நிலக்கடலை உடல் எடை குறைப்பவர்களுக்கான சிறந்த சிற்றுண்டியாகும்.
ஸ்வீட் கார்ன்: மாலை நேர சிற்றுண்டியில், கலோரி அளவி குறைவாக கொண்ட வேகவைத்த ஸ்வீட் கார்னை சாப்பிடலாம். காரமான உணவு வேண்டும் என்றால் சோள சாலட் செய்தும் சாப்பிடலாம்.
மக்கானா: மாலை நேர சிற்றுண்டியில் மக்கானா என்னும் தாமரை விதை உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.
பழங்கள்: மாலை நேர சிற்றுண்டியில் பழங்களை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். ஜூஸ் அருந்த பிடிக்கும் என்றால் பழங்களின் சாறு அல்லது மில்க் ஷேக் குடிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.