காஷ்மீரில் பனிப்பொழிவு: வெள்ளை போர்வை போர்த்திய மலைகளின் அற்புத காட்சி!

கடும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் முதல் சமவெளி வரை, காஷ்மீர் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

1 /5

செவ்வாய்க்கிழமை மாலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் பனி பெய்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குறைந்தது ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாகின. இது தவிர, பனிஹாலில் இருந்து பாரமுல்லா வரையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

2 /5

ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. செவ்வாய்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை பல பகுதிகளில் 8 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.

3 /5

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை நடைபெறவிருந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து யுஜி, பிஜி மற்றும் தொழில்முறை படிப்புகளின் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

4 /5

கடும் பனிப்பொழிவு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காஷ்மீர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5 /5

வியாழக்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் முன் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.