Honda Bike Price: விலை குறையும் ஹோண்டா பைக்குகள்..!

ஹோண்டா நிறுவனத்தின் முதல் ஷைன் 100 சிசி பைக்குகள் நாடு முழுவதும் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

 

1 /5

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் 100. கடந்த மார்ச் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் இந்த பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறப்பான மைலேஜ் வழங்கக் கூடிய விலை குறைவான பைக் ஆகும். ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

2 /5

கர்நாடக மாநிலம் நர்சபுரா பகுதியில் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்குதான் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் மே 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.  

3 /5

ஹோண்டா ஷைன் 100 பைக்கை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. இந்த பைக்கில், புத்தம் புதிய 98.98 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், OBD2 விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஷைன் 100 பைக், ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

4 /5

எனவே பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஆகிய போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குகள் மட்டுமல்லாது, ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கிற்கும், ஹோண்டா ஷைன் 100 விற்பனையில் கடுமையான போட்டியை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மாடல் பைக்கிற்கு வெறும் 64,900 ரூபாய் மட்டுமே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

5 /5

ஹோண்டா ஷைன் 100 பைக் இன்ஜினின் பவர் அவுட்புட் சுமார் 8 பிஹெச்பி ஆகும். இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், கருப்பு நிற அலாய் வீல்கள், அலுமினியம் க்ராப் ரெயில் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 5 வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். சிகப்பு உடன் கருப்பு, நீலம் உடன் கருப்பு, பச்சை உடன் கருப்பு, கோல்டு உடன் கருப்பு, க்ரே உடன் கருப்பு ஆகியவை ஆகும். இந்த விலை குறைந்த பைக்கை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.