ஒருவரது உறக்கத்திற்கும், உடல் எடை அதிகரிப்பிற்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆய்வுகளின்படி போதுமான அளவு ஒருவர் தூங்கவில்லையென்றால் எவ்வளவு டயட் இருந்தாலும் அவருக்கு உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெறலாம்.
தூக்கமின்மையால் சோர்வு, ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும், சோர்வை நீக்க உங்கள் உடல் கேஃபைன் மற்றும் இனிப்பு வகைகளை தேடும், இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடலில் கிரெலின் எனும் ஹார்மோன் சுரக்கிறது, இது சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும் ஹார்மோனாகும். இதன் காரணமாக நீங்கள் அதிக உணவு உட்கொண்டு உடல் எடை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.
அதுவே லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது, ஒழுங்கான தூக்கமில்லையென்றால் லெப்டின் ஹார்மோன் சரியாக செயல்படாது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும்.