தோனி தன்னை ரிலாக்ஷாக வைத்துக் கொள்ள செய்யும் 3 விஷயங்கள்

எம்எஸ் தோனி தன்னை ரிலாக்ஷாக வைத்துக் கொள்ள 3 முக்கியமான விஷயங்களை செய்வாராம். அது என்ன என அவரே சொல்லியிருக்கிறார் என்பதால் வாங்க பார்க்கலாம்.

1 /5

யூடியூப் சேனல் ஒன்றில் இதுகுறித்து தோனி பேசுகையில், "நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் என் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பினேன். 

2 /5

அதே சமயம் மனதளவிலும் சுறுசுறுப்பாக இருக்கவும் விரும்பினேன். என் மனதில் எப்போதும் ஒரு உத்வேகம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். எனக்கு விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும். மேலும், மோட்டார் பைக்குகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரியமிக்க கார்களை சேகரிக்கத் தொடங்கினேன். 

3 /5

இது போன்ற விஷயங்கள் என்னை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். நான் மன அழுத்தத்திற்கு உள்ளானால் எனது மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்திருக்கும் கேரேஜ்க்கு செல்வேன். அங்கு சில மணி நேரத்தை செலவிடுவேன். அப்போது என் மனம் அழுத்தத்திலிருந்து வெளிவரும். 

4 /5

அதன் பின் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவேன். நான் சிறு வயதில் செல்லப்பிராணிகளுடன் வளர்ந்தேன். எனக்கு நாய்களை மிகவும் பிடிக்கும். அவை நம் மீது அளவு கடந்த அன்பை செலுத்தும். நான் இதற்கு முன்பும் ஒரு பேட்டியில் இது பற்றி கூறி இருக்கிறேன். 

5 /5

நான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து வீட்டுக்கு வந்தாலும், என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும்." என தெரிவித்துள்ளார். தோனியின் இந்த அணுகுமுறை பலருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது.