எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.

 

1 /6

ஒவ்வொரு 3-4 மாதங்களுக்கும் உங்கள் டூத் பிரஷை மாற்றுவது நல்லது. தேய்ந்து போன டூத் பிரஷ் பயன்படுத்துவதால் உங்கள் பற்களில் உள்ள அழுக்குகளை சரியாக சுத்தம் செய்ய முடியாது.

2 /6

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவமனைக்கு சென்று உங்கள் பற்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் பல்லில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன்கூட்டியே தடுக்க உதவும்.  

3 /6

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதங்கள் என நல்ல உணவை தினசரி சாப்பிடுவது நல்லது. மேலும் அதிகமாக சர்க்கரை அல்லது சாக்லேட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.  

4 /6

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்யவும், ஈறு நோயை தடுக்கவும், உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும் தினசரி நல்ல மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது.   

5 /6

தினசரி ஃப்ளோஸ் (Floss) செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் மற்றும் ஈறுகளில் இருக்க கூடிய பிளேக் மற்றும் உணவுத் துகள்களை அகற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஃப்ளோஸ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.  

6 /6

தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை பல் துலக்க வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய மென்மையான முட்கள் கொண்ட பிரஸ்களை பயன்படுத்தவும்.