ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோ

Income Tax Return Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். 

Income Tax Return Filing: உங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க விரும்பினால், சில நிமிடங்களில் அதை செய்யலாம். ITR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான படிப்படியான வழிமுறையை பற்றி இங்கே காணலாம். இதன் மூலம் ITR -ஐ சில நிமிடங்களில் சமர்ப்பிக்க உங்களுக்கு உதவி கிடைக்கும். 

1 /8

2023-24 நிதியாண்டு மற்றும் 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான நேரம் மற்றும்  31 ஜூலை 2024 வரை உள்ளது. வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்ய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. 

2 /8

பணிபுரியும் பெரும்பாலான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய படிவம் 16க்காக காத்திருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்கத் தொடங்கியுள்ளன. சில நிமிடங்களிலேயே ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம். 

3 /8

ஐடிஆர் -ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய, முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ க்குச் செல்ல வேண்டும். வருமான வரித்துறையில் ஈ-ஃபைலிங் இணையதளத்தைத் திறந்து உங்கள் பான் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். 

4 /8

இதற்குப் பிறகு File Income Tax Return என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில் மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2023-24 நிதியாண்டிற்கான ITR ஐ நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.  

5 /8

இதற்குப் பிறகு நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். அதாவது, தனிநபர், HUF மற்றும் பிற விருப்பங்களில் உங்களுக்கு தகுந்த பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஐடிஆருக்கு ‘Individual’ என்பதைக் கிளிக் செய்யலாம். இதற்குப் பிறகு ITR வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் 7 வகையான ஐடிஆர் உள்ளது. ITR இன் 1 முதல் 4 வரையிலான படிவங்கள் தனிநபர் மற்றும் HUFக்கானவை.

6 /8

அடுத்த கட்டத்தில் நீங்கள் ITR க்கான வகை மற்றும் காரணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே நீங்கள் அடிப்படை விலக்குகளை விட வரி விதிக்கக்கூடிய வருமானம் போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இங்கே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்ய வேண்டும்.

7 /8

ப்ரீ-ஃபில்ட் தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இங்கே பான், ஆதார், பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல் மற்றும் வங்கி விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். மேலும், இங்கே வருமானம், வரி மற்றும் விலக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். விவரங்களை கொடுத்த பிறகு, வரி மீதம் இருந்தால், அதை கட்ட வேண்டும்.

8 /8

ITR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படும்: பான் மற்றும் ஆதார் அட்டை, வங்கி அறிக்கை, படிவம் 16. நன்கொடை சீட்டு, முதலீடு, காப்பீட்டு பாலிசி செலுத்தும் ரசீதுகள் மற்றும் வீட்டுக் கடன் செலுத்தும் சான்றிதழ் அல்லது ரசீது, வட்டி சான்றிதழ்