அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது. வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை (Body Weight Loss) எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். அதைப்பற்றி பார்போம்.
உங்களுக்கு பசி எடுக்கும் போது ஆரோக்கியமற்ற உணவை உண்பதை விட ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், இதனால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்
அதிக கலோரி அடங்கிய வெண்ணெய், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் இனிப்பு போன்ற பொருட்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.
தினமும் காலையில் தக்காளி மற்றும் கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமைமாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.