பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டவும், வாகனம் நல்ல மைலேஜ் கொடுக்கவும், அதன் டயர்கள் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். இதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
எரிபொருள் சிக்கனம் பாதுகாப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு, டயர்களை சிறப்பாக பராமரிப்பது அவசியம். இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அன்றாடம் செய்தித்தாள்களில் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்துக்கள், டயர்களை சரியாக பராமரிப்பது பராமரிக்காமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான பல சம்பவங்களை நாம் கேள்விப்படுகிறோம்.
எரிபொருளுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்ய, வாகன டயர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
டயர்களின் தரம்: டயர்களை வாங்கும் போது காசை மிச்சம் படுத்தும் நோக்கில், உள்ளூர் கடைகளில் வாங்காமல். அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தான் இருந்தது மட்டுமே வாங்குவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
தேய்மானம்: டயர்கள் தேய்மானம் ஆகிவிட்டதா என்பதை கவனித்து அதனை அவ்வப்போது மாற்ற வேண்டும். தேய்மானம் அதிகம் உள்ள டயரை ஓட்டுவது பாதுகாப்பானது அல்ல.
டயர் பரிசோதனை: டயர்களில், பெட்டுக்கள், அல்லது பிற பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை அவ்வப்போது சோதித்துப் பார்ப்பது நல்லது. இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
டயர்களை ரொட்டேட் செய்தல்: நிறுவனம் பரிந்துரைத்துள்ளபடி, குறிப்பிட்ட தூர பயணத்திற்குப் பிறகு டயர்களை ரொட்டேட் செய்ய வேண்டும். அதாவது முன் பக்க டயர்களை பின்பக்கத்திற்கு கொண்டு செல்வது, மற்றும் பின்பக்க டயர்களை முன் பக்கத்தில் பொருத்துவது போன்ற வற்றை கடைபிடிக்க வேண்டும்.
டயரில் உள்ள அழுத்தம்: வாகனம் ஓட்டும் போது டயரில் உள்ள காற்றின் அழுத்தம் சரியான நிலையில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் நல்ல மைலேஜ் கொடுக்கும்.
நிதான டிரைவிங்: இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிதானமாக, சீராக வாகனத்தை ஓட்டுவது வாகன டயர்கள் நீடித்து இருக்க உதவும்