சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் கோடீஸ்வரன் ஆவதற்கான திட்டத்தை வகுக்கலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும்.
முதலீடு செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், திட்டமிட்டு முதலீடு செய்வது, உங்கள் பணத்தை பன்மடங்காக பெருக்கி எளிதில் பணக்காரர் ஆக்கும்.
அனைவரும் உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். மேலும் சிறந்த வருமானத்தையும் பெற வேண்டும் எனவும் விரும்புவார்கள். சிலர் தங்கள் ஓய்வூதிய காலத்திற்கு நிதி சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர், சிலர் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் கல்விக்காக நிதியை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது பெரிய அளவில் நிதிய சேமிப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதில் முதலீடு செய்வதன் மூலம் 21 ஆண்டுகளில் கோடீஸ்வரரர் ஆகலாம். அதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் திட்டமிட்டு சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.
SIP என்பது நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்த வருமானத்தைப் பார்த்தால், பல எஸ்ஐபிகளின் வருமானம் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே வந்துள்ளது. சராசரியாக, வருவாய் விகிதம் 12 முதல் 16 சதவீதம் வரை உள்ளது.
பரஸ்பர நிதியத்தின் மூலம் கிடைக்கும் வருமான தொகையையும், மீண்டும் திட்டமிட்டு முதலீடு செய்வது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபண்டாக மாற உதவுகிறது.
எஸ்ஐபி: ரூ 2 கோடி வரை பணம் சேர்க்க, மாதத்திற்கு ரூ. 10,000 என்ற அளவில் 21 ஆண்டுகள் தொடர வேண்டும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.25,20,000 ஆக இருக்கும். இப்போது நீங்கள் சராசரியாக 16 சதவிகிதம் வருமானத்தைப் பெறுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் திரும்ப பெறும் தொகை ரூ.1,81,19,345 ஆக இருக்கும். இதன்படி 21 ஆண்டுகளில் உங்கள் மொத்த நிதி ரூ.2,06,39,345 ஆக இருக்கும்.
பங்குச் சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பரஸ்பர நிதிகள் குறித்த முதலீட்டாளர்கள் மிகவும் நம்பிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இதை சில புள்ளிவிவரங்கள் மூலம் மதிப்பிடலாம். நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்ட தரவுகளின்படி, பரஸ்பர திட்டத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ( எஸ்ஐபி) அதிகரித்து வருவதோடு, இதன் மூலம் முதலீடு ரூ.17,000 கோடியை தாண்டியுள்ளது என கூறப்படுகிறது.