Aadhaar Update: 10 வருடம் பழைய ஆதார் அட்டையை இன்றே அப்டேட் செய்யவும்..!!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்கள் மூலம் பலன்களை பெறுவது மட்டுமல்லாமல், பள்ளி சேர்க்கை முதல் வேலையில் சேருவது, வங்கியில் கணக்கு திறப்பது வரை, எண்ணற்ற பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாய அடையாள ஆவணமாக உள்ளது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க நீங்கள் ஜூன் 14 வரை கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால், அதற்கு பின்னர் புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். 

1 /8

UIDAI விதி: ஆதார் அட்டை வழங்கும் UIDAI விதிகளின்படி, ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் மற்றும் முகவரி ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

2 /8

ஆதார் அப்டேட்: உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுக்கு முன்னர் பெற்றதாக இருந்தால், இந்த செய்தியை நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் ஆதார் அட்டையை உருவாக்கி 10 வருடங்கள் ஆகியும் அதை நீங்கள் இதுவரை புதுப்பிக்கவில்லை என்றால், அதற்கு இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

3 /8

ஆதார் இலவச அப்டேட்: UIDAI தளத்தில் இலவசமாக ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு 15 டிசம்பர் 2023  என முன்னதாக நிர்ணயிக்கபப்ட்டு, பின்னர் இது இப்போது 14 ஜூன் 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

4 /8

புதுப்பிக்க கட்டணம்: UIDAI நிர்ணயித்த தேதிக்குப் பிறகும் உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்றால், UIDAI விதிகளின்படி நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

5 /8

ஆதார் அட்டை: ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க நீங்கள் myAadhaar போர்ட்டலில் சில ஆவணங்களை பதிவேற்ற வேண்டியது அவசியம். நீங்கள் அப்டேட் செய்ய உள்ள தகவலை பொறுத்து, அதற்கு ஏற்ற வகையில், அடையாளச் சான்று, முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

6 /8

ஆன்லைனில் ஆதார் அட்டை புதுப்பித்தல்: UIDAI போர்ட்டலான https://ssup.uidai.gov.in/ssup/ என்னும் இணைய தளத்தில்  லாக் இன் செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டால், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ‘ OTP’ அனுப்பப்படும்.

7 /8

OTP: பதிவு செய்யப்பட்ட ம்மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு தொடரவும். அதில்,  'Update Aadhaar Online' என்பதைத் தேர்ந்தெடுத்து,அதில்  மாற்றங்களைச் செய்ய தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர் உங்கள் ஆதார் விபரங்கள் அப்டேட் செய்யப்படும்.

8 /8

தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு,  ஓட்டுனர் உரிமம், பான் கார்டு,  வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஒன்றை நீங்கள் ஆவணமாக சம்ர்பிக்கலாம்.  உதாரணத்திற்கு முகவரியை மாற்ற வேண்டும் என்றால், மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்புக் கட்டணங்கள், ரேஷன் கார்டு, ஆகியவை தேவை.