Zainab Abbas:நடப்பு உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருமான ஜைனப் அப்பாஸ் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
Zainab Abbas: ஜைனப் அப்பாஸ் பாகிஸ்தானுக்கே திரும்பிய பின்னணி குறித்தும், ஐசிசி அளித்த பதில் குறித்தும் இங்கு காணலாம்.
ஜைனப் அப்பாஸ் பாகிஸ்தான் பிரபலமான விளையாட்டு சார்ந்த தொகுப்பாளர் ஆவார். இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
ஜைனப் அப்பாஸை புகழாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக மிக குறைவு. தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர் ஒப்பனை கலைஞரும் ஆவார்.
பாகிஸ்தானில் மிக மிக பிரபலமான இவருக்கு இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். இவர் இங்கிலாந்தில் வார்விக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இவர் 1988ஆம் ஆண்டு பிப். 14ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டில் முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். இவரின் தாயார் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
2019இல் ஜைனப் அப்பாஸ் ஐசிசி உலகக் கோப்பையில் முதல் பாகிஸ்தானிய பெண் தொகுப்பாளராக உருவெடுத்தார்.
ஜைனப் அப்பாஸ் 2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்திருந்தார். இவர் இந்து-விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், இதுகுறித்து ஐசிசி பதிலளித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நாடு திரும்பினார் என கூறியுள்ளது.