குரு உதயம்: இந்த ராசிகளின் வாழ்க்கை அட்டகாசமாய் இருக்கும், செல்வம் கொழிக்கும்

Guru Uday 2023: குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். இந்த வழியில், மேஷம் முதல் மீனம் வரை அவரது ஒரு சுழற்சி 12 ஆண்டுகளில் முடிவடைகிறது. சமீபத்தில், தேவகுரு வியாழன் தனது ராசியான மீன ராசியை விட்டு விலகி மேஷ ராசிக்கு பிரவேசித்துள்ளார். 

குரு பகவான் மேஷ ராசியில் 22 ஏப்ரல் 2023 அன்று பெயர்ச்சியானார். மேஷ ராசியிலேயே அவர் ஏப்ரல் 27 வரை அஸ்தமன நிலையில் இருந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி, குரு அஸ்தமன நிலையிலிருந்து மாறி, மேஷ ராசியிலேயே உதயமானார். குரு பகவான் மே 1, 2024 வரை மேஷ ராசியில் இருப்பார்.

1 /6

குரு உதயம்: குரு பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் வியாழன் மேஷத்தில் உதயமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. குருவின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் செல்வமும் மரியாதையும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம். 

2 /6

மேஷம்: குரு பகவானின் அருளால் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். பண வரவால் நன்மை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி கிடைக்கும், அரசுப் பணிகள் தடையின்றி முடிவடையும்.

3 /6

கடகம்: குருவின் உதயம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.   

4 /6

சிம்மம்: இந்த நேரத்தில், உங்கள் ஆசிரியர் மற்றும் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். மேலும் பணியிடத்தில் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஷேர் மார்கெட்டில் வேலை செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரம் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் சாதகமாக இருக்கும்.

5 /6

தனுசு: மேஷ ராசியில் குரு உச்சம் பெறுவதால் மாணவ, மாணவியருக்கு படிப்பில் இருந்த தடை நீங்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வணிக வகுப்பினருக்கும் நேரம் நன்றாக இருக்கும். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

6 /6

மீனம்: குரு உதயம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் தொடரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் பிற துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைக்கும்.