சதயத்தில் மாறிய சனி: அடுத்த 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம், ராஜயோகம்

Shani Nakshatra Gochar: சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதி கடவுள் ஆவார். சனி தோஷத்தைப் போக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சனிபகவான் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. சனி தற்போது தனது ராசியான கும்பத்தில் இருக்கிறார். 

 

இது தவிர மார்ச் 15ம் தேதி சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பார். 

 

1 /7

சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும், இதன் காரணமாக 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

2 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் வரையிலான காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் தொடங்கலாம். இந்த நேரம் வணிகர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி கௌரவம் கிடைக்கும். 

3 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சதய நட்சத்திரப் பிரவேசம் பல நன்மைகளைத் தரப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.  

4 /7

அக்டோபர் மாதம் வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சதய நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் வெற்றி கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு நல்ல நேரமாக இது இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

5 /7

துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் மிகவும் சுப பலன்களைத் தரப் போகிறார். பதவி உயர்வு பெறலாம். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

6 /7

சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைந்தது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது