இதை செய்தால் எளிய முறையில் காரில் பெட்ரோலை சேமிக்கலாம்!

ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, எரிபொருள் செலவை சேமிக்க சில வழிமுறைகள் உள்ளது. 

 

1 /5

முடிந்தவரை சைக்கிளில் செல்வது, நடப்பது போன்றவற்றை செய்வதால் உடல் நலமும், சுற்றுசூழலுக்கு மேம்படுவதோடு எரிபொருள் செலவும் இருக்காது.  பெரிய கார்களை பயன்படுத்தாமல் சிறிய ரக கார்களை பயன்படுவதால் மூலம் எரிபொருள் செலவை சேமிக்கலாம்.  

2 /5

அடிக்கடி பிரேக் போடாமல் சீராக வாகனம் ஓட்டுவது போக்குவரத்தை சிக்கலை குறைப்பதோடு எரிபொருள் கட்டணத்தையும்  சேமிக்க வழிவகுக்கிறது.  அடிக்கடி பிரேக் போடுவதால் ஏற்படும் விசையினால் எரிபொருள் வீணாகும்.  

3 /5

உங்கள் வாகனத்தின் இன்ஜினுக்கு போதுமான அளவு ஓய்வை கொடுக்க வேண்டும், தேவையில்லாமல் இன்ஜின் இயக்கத்தில் இருப்பதால் அதிகளவு எரிபொருள் வீணாக நேரிடும்.  

4 /5

வாகனங்களில் உள்ள ஏர் கண்டிஷனர் 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை எரிபொருளை கூடுதலாக பயன்படுத்துகிறது.  அதனால் ஏர் கண்டிஷனர் நிறுத்தி வைத்துவிட்டு, காரின் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையான காற்றை சுவாசியுங்கள்.  

5 /5

ஏரோடைனமிக் திறன் கொண்ட வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை எரிபொருளை சேமிக்கலாம்.