Income Tax Saving: வருமான வரியைச் சேமிக்க மனைவி உதவலாம், இரட்டை நன்மை கிடைக்கும்!

வருமான வரி சேமிப்பதில் உங்கள் மனைவி ஒரு சிறந்த உதவியாக இருக்கலாம். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். 

பெண்கள் தொடர்பாக இந்திய அரசு ஒரு சிறப்பு விதியை உருவாக்கியுள்ளது, இதன் கீழ் கணவருக்கு வரி விலக்கு கிடைக்கும், அதுவும் இரட்டை நன்மைகளுடன்! எப்படி என்று தெரிந்து கொள்வோம் ...

Also Read | பாலிவுட் நடிகைகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் கிசுகிசுக்கள்

1 /5

கொரோனா சகாப்தத்தில், அனைவருக்கும் சுகாதார காப்பீடு எடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.   சுகாதார காப்பீடு உங்களை மருத்துவமனைகளின் விலையுயர்ந்த சிகிச்சை செலவுகளிலிருந்து காப்பாற்றுவதோடு, வரி சேமிப்புக்கும் உதவும். நீங்கள் 60 வயதிற்குட்பட்டவராக இருந்தால், சுகாதார காப்பீட்டு பிரீமியம் மூலம் 25 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கவும் முடியும். உங்கள் மனைவி மற்றும் குழந்தையின் பிரீமியத்துக்கும் நீங்கள் விலக்குப் பெறலாம் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 டி இன் கீழ் விலக்கு பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.

2 /5

வரியைச் சேமிக்க ஒரு சுலபமான வழி வீட்டுக் கடன் வாங்குவதாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடன் எடுத்திருந்தால்,   ஈ.எம்.ஐ செலுத்துபவர் வரி விலக்கின் பயனைப் பெறலாம். பிரிவு 80 சி இன் கீழ் ரூ .1.5-1.5 லட்சம் வரை விலக்கு கிடைக்கும். அதே நேரத்தில், வட்டி பகுதிக்கு பிரிவு 24 இன் கீழ் 2-2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.

3 /5

வரி சேமிக்க எளிதான வழி ஆயுள் காப்பீடு செய்துக் கொள்வது. வருமான வரி தாக்கல் செய்யும் பெரும்பாலானோர் கடைசி நிமிடத்தில் இதைத்தான் செய்கிறார்கள். நீங்கள் காப்பீட்டுக் கொள்கையை கூட்டாக எடுத்துக் கொண்டால், மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் நீங்கள் எந்தவிதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதில்லை. கூட்டு காப்பீட்டுக் கொள்கையில், குறைந்த பிரீமியத்தில் அதிக நன்மை பெறுவீர்கள். அதோடு, பிரிவு 80 சி இன் கீழ், வருமான வரி விலக்கின் பலனையும் பெறலாம்.

4 /5

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ், குழந்தைகளின் கல்விக்கு ஆகும் செலவில் 1.50 லட்சம் வரை விலக்கு பெறலாம். எந்தவொரு பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி அல்லது எந்தவொரு கல்வி நிறுவனத்தில் படித்தாலும்  குழந்தைகளின் கல்விக்கான செலவுக்கு வாங்கும் கடனுக்கு விலக்கு கிடைக்கும்.  இரண்டு குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவுகளுக்கு விலக்கு கிடைக்கும்.  

5 /5

வரி செலுத்துபவர் நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டு பயணங்களுக்கு விடுப்பு பயண உதவித்தொகையைப் பெறலாம். கணவன்-மனைவி இருவரும் வரி செலுத்துவோர் என்றால், அவர்கள் ஒன்றாக 4 ஆண்டுகளில் 4 பயணக் கொடுப்பனவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழியில், அவர்கள் இரண்டுக்கு பதிலாக 4 முறை விடுமுறைப் பயனை அனுபவிக்கலாம்.