மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்று இந்திய அணி பந்துவீசுகிறது.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது.
இந்த மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கு கோட்டையாகும். இதுவரை அங்கு 7 போட்டிகளில் விளையாடி இருக்கும் அந்த அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளே அதிக முறை வெற்றி பெற்றிருப்பதால் இம்முறை டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த அதிர்ஷ்டம் அணியின் வெற்றிக்கு உதவும் என ரசிகர்களின் யூகமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நவம்பர் 2022க்குப் பிறகு இப்போது தான் முதன் முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்.
அஸ்வினைப் பொறுத்தவரை மொஹாலி மைதானம் ராசியானது இல்லை. அவர் இங்கு ஒருநாள் போட்டிகளில் 29 ஓவர்கள் வீசி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை பொறுத்தவரை, கேப்டனாக இருக்கும்போது அவர் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. கேப்டனாக அவர் 19 மட்டுமே பேட்டிங் சராசரியாக வைத்திருக்கிறார்.
ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்ட முகமது சிராஜ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக முகமது சமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காயத்தில் இருந்து குணமாகி வந்திருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.