Extreme Cold Conditions In India: புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹராயானா மற்றும் தலைநகர் புதுடெல்லி போன்ற மாநிலங்களில் வெப்பநிலை சரிந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் டெல்லியில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று 'கடுமையான' குளிர் நிலவுகிறது. மூடுபனி காரணமாக வாகனப்போக்குவரத்து பாதிப்பு
மூடுபனி காரணமாக வாகனப்போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாபில் பெரும்பாலான இடங்களில் கடுமையான குளிர் பதிவாகியுள்ளது
வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது
டெல்லியில் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடுமையான குளிர்காலம் தொடங்கியுள்ளது, இது சுமார் 40 நாட்கள் நீடிக்கும்.