2022 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள்!

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளது.  அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி குரூப் B-ல் இடம்பிடித்துள்ளது.  முதல் சுற்றில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடவுள்ளது.  

1 /5

அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா விளையாடும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.  மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.   

2 /5

அக்டோபர் 27-ம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.  இது சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.   

3 /5

அக்டோபர் 30ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பெர்த் மைதானத்தில் விளையாட உள்ளது.   

4 /5

நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.  அடிலெய்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.   

5 /5

நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள போட்டி இந்தியா மற்றும் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விளையாடவுள்ளது.