ஐபிஎல் மினி ஏலம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் ஜாக்பாட் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் பியேர்கள் லிஸ்டை பார்க்கலாம்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வருகிறார். வில்லியம்சன் சமீபத்தில் நியூசிலாந்தை டி20 உலகக் கோப்பை-2022 அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், இந்த ஆண்டு அவர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அபாரமான இன்னிங்ஸ் விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்த முறை ஏலத்தில் பெரும் விலைக்கு வாங்க வாய்ப்புள்ளது. ரூ.2 அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வருகிறார். அனைத்து அணிகளும் ஸ்டோக்ஸுக்காக போட்டியிட வாய்ப்புள்ளது. 31 வயதான ஸ்டோக்ஸ் 157 டி20 போட்டிகளில் விளையாடி 3008 ரன்களும், 93 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது ஆல்ரவுண்டர் சார் கரன் ரூ.2 கோடி பட்டியலில் இணைந்துள்ளார். இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். இந்த இளம் ஆல்ரவுண்டரும் ஏலத்தில் நல்ல விலைக்கு வர வாய்ப்புள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் மொத்தம் 158 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகளின் முன்னணி ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வருகிறார். கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு அந்த அணி அவரை கழற்றிவிட்டது. ஏலத்தில் இவருக்கு வரவேற்பு இருக்குமா? என்பது கேள்விக்குறி.
மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் அடிப்படை விலையான ரூ.2 கோடியுடன் ஏலத்தில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய பூரன் சில சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடினார். ஆனால், ஐதராபாத் அணி பூரனை அணியில் இருந்து விடுவித்தது. அவர் இதுவரை 256 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 27 அரை சதங்களுடன் 4942 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 35 வயதான ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸும் ரூ.2 கோடி மதிப்பிலான பட்டியலில் தனது பெயரை பதிவு செய்தார். டி20யில் அவரது ஒட்டுமொத்த சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் 173 போட்டிகளில் 11 அரைசதங்களுடன் 2788 ரன்கள் குவித்து 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏலத்தில் இவரை எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா? என்பது கேள்விக்குறி
கிறிஸ் ஜோர்டான், நாதன் கூல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பான்டன், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷீத், பில் சால்ட், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரிலே ரோசோ, ரோஸ்ஸி வாகன் மற்றும் பிற வெளிநாட்டு வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் பெயரை பதிவு செய்துள்ளனர்.