IPL 2023: தொடக்க விழாவில் ரஞ்சிதமே... மிரட்ட காத்திருக்கும் ஐபிஎல் - முழு விவரம்!

IPL 2023 Opening Ceremony: 16ஆவது ஐபிஎல் சீசன் நாளை (மார்ச் 31) சுமார், அடுத்த இரண்டு மாதங்களுக்கு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 70 லீக் போட்டிகள், வரும் மே 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், லீக் போட்டிகளின் இடையே அவை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Mar 30, 2023, 17:41 PM IST

IPL 2023 Opening Ceremony Full Details: ஐபிஎல் தொடர், குஜராத் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. அந்த வகையில், ஐபிஎல் தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்பார்கள் குறித்தும், இந்த ஐபிஎல் தொடர் குறித்து அனைத்து தகவல்களையும் இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

 

1 /7

இரண்டு பிரிவுகள்: 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குருப் 'ஏ' பிரிவில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், அணிகள் உள்ளன. 

2 /7

12 மைதானங்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ்- எம்ஏ சிதம்பரம் மைதானம்; டெல்லி கேப்பிடல்ஸ் - அருண் ஜெட்லி மைதானம்; குஜராத் டைட்டன்ஸ் - நரேந்திர மோடி மைதானம்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஈடன் கார்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - எக்னா கிரிக்கெட் மைதானம்; மும்பை இந்தியன்ஸ் - வான்கேடே மைதானம்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சின்னசாமி மைதானம்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜிவ் காந்தி மைதானம்; பஞ்சாப் கிங்ஸ் - ஐஎஸ் பிந்தரா மைதானம், தர்மசாலா கிரிக்கெட் மைதானம், ராஜஸ்தான் ராயல்ஸ் - சவாய் மான்சிங் மைதானம், கௌகாத்தி ஏசிஏ மைதானம். 

3 /7

கேப்டன்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் -  எம்.எஸ். தோனி; மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா; குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நிதிஷ் ராணா; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கேஎல் ராகுல்; டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பாப் டூ பிளேசிஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம்; ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்; பஞ்சாப் கிங்ஸ் - ஷிகார் தவாண்.   

4 /7

நான்கு ஆண்டுகளுக்கு பின்...: இறுதியாக, 2018ஆம் ஆண்டில்தான் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 2019ஆம் ஆண்டில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக தொடக்க விழா நடத்தப்படவில்லை. 2020, 2021, 2022 ஆகிய சீசன்களில் கொரோனா தொற்று காரணமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. எனவே, தற்போது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   

5 /7

நடைபெறும் இடம்: 16ஆவது ஐபிஎல் சீசனின் தொடக்க விழா குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மாலை 6 மணியளவில் தொடங்கும். இதே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளனர்.

6 /7

பங்கேற்கும் கலைஞர்கள்: ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொண்டு ஃபெர்பாமன்ஸ் செய்ய உள்ளனர். நடிகர்கள் டைகர் ஷெராஃப் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

7 /7

எதில் பார்ப்பது: ஐபிஎல் தொடக்க நிகழ்வை மட்டுமின்றி முழு தொடரையும் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். மொபைல், மடிக்கணினி, கணினி, ஸ்மார்ட் டிவி ஆகியவற்றில் ஜியோ சினிமாஸின் நேரடி ஒளிபரப்பை கண்டுகளிக்கலாம்.