சுங்கச்சாவடி விலை உயர்வு: ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரிப்பு? - உண்மை என்ன?

Tamil Nadu Latest News Updates: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

  • Sep 02, 2024, 20:40 PM IST

ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆம்னி பேருந்துகள் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 /8

தமிழகத்தின் 25 சுங்கச்சாவடிகளில் (Toll Price Hike) நேற்று முதல் (செப். 1) கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.   

2 /8

அதன்படி ரூ. 5 முதல் 150 ரூபாய் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.   

3 /8

இந்த கட்டண உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

4 /8

இதுஒருபுறம் இருக்க, தமிழகத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியது.   

5 /8

இதற்கிடையில் தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்தி ஒன்று வெளியானது.   

6 /8

இது உண்மையா வதந்தியா என தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். இதற்கு தற்போது அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.   

7 /8

அதாவது தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படாது. மேலும் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை தாங்கள் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளது.   

8 /8

ஆம்னி பேருந்துகள் பலவும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதனால் பண்டிகை தினங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக விலைக்கு பேருந்துகளை இயக்குவதாகவும் பொதுமக்கள் சார்பில் புகார்கள் வருவதும் உண்டு. இருதரப்புக்கு பிரச்னை இருப்பதால் அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கைகள் இருந்த நிலையில், தற்போது இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு மேலும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது.