பனிக்கடல் யானைகள் கடல் பயணம் மேற்கொண்டுள்ளதை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் அரிய நிகழ்வு என்பதால் அதிசயமான விஷயமாக இருக்கிறது.
பனிக்கடல் யானை எனப்படும் walrus பனிப் பிரதேசத்தில் வாழ்வது. உலகின் அரியவகை உயிரினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பனிக்கடல் யானையை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால், இந்த புகைப்படத் தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
உடல் வெப்பத்திற்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை பழுப்பு அல்லது இளம் சிவப்பு நிறமாக மாற்றிக் கொள்ளும் திறன் பனிக்கடல் யானைகளுக்கு உண்டு
பனிக்கடல் யானைகளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் இருப்பதால், கடல் நீரில் செங்குத்தாக தூங்கும் ஆற்றல் கொண்டது.
பாலூட்டிகளில் மிக நீளமுள்ள ஆண் உறுப்பைக் கொண்டது பனிக்கடல் யானை. ஆண் பனிக்கடல் யானைகளின் பாலின உறுப்பு 63 செண்டி மீட்டர் நீளம் கொண்டது.
பனிக்கடல் யானைகள், கடலில் மட்டுமன்றி, மணல்பரப்பு மற்றும் கடல்தரை திட்டுகளிலும் வாழும் இயல்புடையவை.
தண்ணீரில் நீந்தும்போது வால்ரஸின் மூக்கு மற்றும் காதுகள் மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.