Beat the Heat: நீர்ச்சத்து உணவுகள் மூலம் கோடை வெப்பத்துக்கு ட்ஃப் ஃபைட் கொடுக்கலாம்

உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்க உதவும் கோடைகால உணவுகளைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், எங்களிடம் வெப்பத்தை வாகை சூடி, குளிர்ச்சியாக வைத்திருக்கும் தரும் உணவுகள் பட்டியல் உள்ளது.

1 /6

கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட பல வழிகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது இந்த பருவத்தில் கிடைக்கும் காய்கனிகளை உண்வதுதான். இந்த கோடையில் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்துக் கொண்ட உணவுகளின் பட்டியல் இது  

2 /6

தர்பூசணி ஆரோக்கியமான, ஜூசியான மற்றும் குளிர்ச்சியான உணவுகளில் ஒன்று.   ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் வயிற்றுக்கும், எடை இழப்புக்கும் நல்லது தர்பூசணி, மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைத் தணிக்கிறது.

3 /6

ஒரு கிண்ணம் உணவில் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்த வழி சாலடுகளை சாப்பிடுவது.  துளசி, வெள்ளரிகள் மற்றும் பிற ஆரோக்கியமான கோடைகால காய்களை சேர்த்து சாப்பிடுவது நீர்ச்சத்துக்கு மட்டுமல்ல எடையை குறைக்கவும் அற்புதமான வழியாகும்.

4 /6

சுரைக்காயை சலிப்பூட்டும் காய்கறியாக நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் இது. கோடையில் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையம் சுரைக்காய். எடை இழப்புக்கு உதவும் சுரைக்காய், இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, செரிமான பிரச்சனைகளை பேணுகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது.

5 /6

நீங்கள் பெர்ரிகளை விரும்புகிறீர்களா? நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது. பெர்ரிகளில் தண்ணீர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை கோடைகாலத்திற்கான சரியான உணவாக அமைகின்றன. உடலில் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன 

6 /6

சூடான கோடைக்காலத்தை சுவையான மக்காச்சோளத்தின் சுவையால் எதிர்கொள்ளலாம். மாவுச்சத்து அதிகம் கொண்ட சோளம், கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உற்பத்திக்கு உதவுகிறது, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதானவர்களுக்கு கண்பார்வையை மங்காமல் பார்த்துக் கொள்ளும்.