இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!

சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.

 

1 /6

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் உள்நாட்டில் கிரிக்கெட் விளையாட முடிவு எடுத்துள்ளார். தனது சொந்த ஊரான ஜார்கண்ட் அணிக்காக இந்த சீசனில் விளையாட ஒப்புக்கொண்டு உள்ளார்.   

2 /6

26 வயதான இஷான் கிஷன் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் ஜார்கண்ட் மாநிலத்திற்காக விளையாட தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.   

3 /6

இந்திய அணியின் முக்கியமான வீரராக இருந்த இஷான் கிஷன் ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்தில் 200 ரன்களை அடித்து சாதனை படைத்து இருந்தார். இருப்பினும் சமீபத்திய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.   

4 /6

தேசிய அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால் இஷான் கிஷன் அதில் விளையாடாமல் தவிர்த்து வந்தார்.   

5 /6

கடைசியாக 2023 ஒரு நாள் உலகக் கோப்பையின் போது இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார், அதன் பிறகு தற்போது வரை அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.   

6 /6

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக தற்போது உள்நாட்டுக்கு விளையாட உள்ளார் இஷான் கிஷன்.