வங்கியில் அதிக பணத்தை வைத்திருப்பது பிரச்சனைகளை ஏற்படுத்துமா? விதிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
பலர் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதா அது பாதுகாப்பானதா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 5 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் வைத்திருப்பது குறித்து மக்கள் மனதில் அடிக்கடி சந்தேகம் எழுகிறது. வைப்புத்தொகை தொடர்பாக வங்கியின் விதிகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துக் கொண்டால், குழப்பம் தீர்ந்துவிடும்.
Also Read | மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!
வங்கியில் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யக்கூடாது என்று பலர் நினைக்கும் நிலையில், அப்படியொரு விதி இல்லை. வங்கி திவாலானால் திவாலாகினாலோ ஐந்து லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு உறுதி என்று விதி கூறுகிறது. ஒருவேளை இந்த காரணத்திற்காக வங்கியில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வைக்கக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்னவோ?
சிக்கலில் உள்ள வங்கி திவாலாக அரசு அனுமதிக்காது, சிக்கலில் இருக்கும் வங்கியை மற்றுமொரு வங்கியுடன் இணைக்கிறது. ஒரு வங்கி செயலிழந்தால், அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பணம் செலுத்துவதற்கு DICGC பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, DICGC வங்கிகளிடமிருந்து காப்பீடு பிரீமியத்தை வசூலிக்கிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான வருமான ஆதாரம் இருக்க வேண்டும், அதாவது, வருமான வரித்துறையிடம் கேட்டால், பணம் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். விதிகளின்படி வரி செலுத்தினால், சரியான வருமானச் சான்று இருந்தால் பிரச்னை இருக்காது.
உங்கள் வங்கிக் கணக்கில் அதிக பணம் இருந்தால், அந்த பணத்தின் ஆதாரத்தை வருமான வரித்துறையின் முன் நிரூபிக்க முடியாவிட்டால், பிரச்சனைகள் வரலாம். உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம்.
சேமிப்புக் கணக்கில் அதிகப் பணத்தை வைப்பதற்கு முன், வைப்புத் தொகைக்கு வட்டி எவ்வளவு என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சேமிப்புக் கணக்கில் அதிகப் பணத்தை வைப்பதற்குப் பதிலாக நிரந்தர வைப்பு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.