எகிறும் சுகர் லெவலுக்கு எமனாகும் நாவல் பழம்... பயன்படுத்தும் சரியான முறை..!!

நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை யோய் உள்ளவர்களுக்கு டயட் மிக முக்கியம். இவர்கள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம்.  அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

நாவல் பழம் ஆங்கிலத்தில் ஜாவா பிளம், பிளாக் பிளம், இந்தியன் பிளாக்பெர்ரி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதோடு, நிறைய நார்ச்சத்து உள்கொண்டது. 

1 /8

நாவல் பழம் என்னும் ஜாமூன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட அற்புதமான பழம். வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற தாதுக்கள் நிறைந்த ஒரு சுவையான குறைந்த கலோரி பழம்

2 /8

நாவல் பழம் சர்க்கரை வியாதியை குணமாக்கும் ஒரு சிறந்த பழம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமலும் தடுக்கிறது. 

3 /8

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் காரணமாக உடலுக்குள் கார்போஹைட்ரேட்டை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் சுகர் லெலவல் குறையும்.

4 /8

நாவல் பழம் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்ட உணவில் அடங்கும். எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. இதில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. 

5 /8

நாவல்  பழத்தை அப்படியே சாப்பிடுது சிறந்த பலன் கிடைக்கும். நாவல் பழ விதை தூளை சாப்பிடுவதும் நல்ல பலன் கொடுக்கும் விதையை காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். நாவல் பழ மரப்பட்டையை தூள் செய்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.

6 /8

இரத்த சோகை: வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து சிறந்த ஆதாரமாக இருப்பதால், நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  இரத்த சுத்திகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. 

7 /8

உடல் பருமன்: நாவல் பழத்தில் கலோரிகள் மிக குறைவாக உள்ளது. மேலும், நார்ச்சத்து நிறைந்தது. எனவே, செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் நீர் தங்குவதை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.