UPI வழியாக ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி -அறிக

Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.

மேலும் தகவல் | கார்டு இல்லாமலேயே கேஷ் கிடைக்கும்: வழிமுறை இதோ

1 /5

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது வங்கி செயலி மூலம் பணம் எடுக்கும் வசதியை வங்கிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் iMobile பயன்பாட்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இருப்பினும், அத்தகைய வசதிகளை அளிக்கும் வங்கிகளின் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.

2 /5

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் UPI மூலம் பணம் எப்படி எடுப்பது.. அது எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இதுக்குறித்து வங்கிகளுக்கான வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை.

3 /5

இதுவரை கிடைத்த தகவலின் படி, ஏடிஎம் திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்கலாம். QR குறியீடுகள் ஸ்கேன் செய்து UPI மூலம் எப்படி பணம் செலுத்துகிறீர்களோ, அதுபோல ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

4 /5

QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், வாடிக்கையாளர் டெபிட் கோரிக்கையை ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து உங்கள் பணத்தை பெறலாம். 

5 /5

UPI ஐடி மற்றும் தேவைப்படும் பணத்தின் அளவு போன்ற விவரங்களை உள்ளிட வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் எனத் தெரிகிறது. விவரங்களை உள்ளிட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி UPI செயலியில் அறிவிப்பைப் பெறுவார்கள். அதன் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெற, வாடிக்கையாளர்கள் வாங்கு செயலி மூலம் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்.