உணவில் அதிகமாக தக்காளி சேர்த்துக்கொள்ளும் பழக்கம் உள்ளதா.. அப்படி என்றால் இதனால் உண்டாகும் பக்க விளைவுகளும், ஆபத்துகளும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உணவில் அதிகமாக தக்காளி சேர்ப்பதனால் உடலில் உண்டாகும் பாதிப்புகளை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தக்காளியை அளவாக சாப்பிட்டால் நலமாக வழலாம்.
தக்காளி உணவுகளுக்கு சுவைய கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள புளிப்புத்தன்மை சமைக்கும் உணவுகளுக்கு புளிப்பு நிறைந்த ஒரு புதுமையான சுவையை தருகிறது. இதில் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தக்காளியில் உள்ள கால்ஷியம், ஆக்ஸலேட் அதிக அளவில் நிறைந்திருக்கும் நிலையில், இவை அளவிற்கு அதிகமாக போனால், செரிமானம் ஆகாமல் சிறுநீரகங்களில் கற்களாக சேரும் அபாயம் உள்ளது.
அதிக அளவில் தக்காளி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் அல்லது அமிலத்தன்மை ஏற்படும். குறிப்பாக இரைப்பை பிரச்சனை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மூட்டு வலி பிரச்னை இருந்தால், தக்காளி சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நலம். ஏனெனில் தக்காளியில் அல்கலாய்டு நிறைந்த சோலானின் மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்குகிறது.
அளவிற்கு அதிகமான தக்காளியினால், சருமத்தில் வெடிப்பு, இருமல், தும்மல், தொண்டையில் அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அலர்ஜி பாதிப்புகள் இருப்பவர்கள் தக்காளியை விட்டு தள்ளி இருப்பது ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும்.