லம்போர்கினி சென்னையில் Huracan EVO ஃப்ளூ காப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தியது; காதலர் தினத்தன்று தனது முதல் காரை வழங்கியது. ஆடம்பர இத்தாலிய பிராண்ட் வாகன தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி செவ்வாயன்று தனது புதிய ஸ்போர்ட்ஸ் காரை - Huracán EVO Fluo Capsule அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
Photos Courtesy: (https://www.lamborghini.com/)
நாட்டின் முதல் Huracán EVO Fluo காப்ஸ்யூல் Arancio Livrea நிறக் கார் சென்னையில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டதாக பிடிஐ தெரிவித்தது. "இந்த சிறப்பு நாளில் ஒரு தந்தை தனது மகளுக்கு அன்புப் பரிசாக (பிப்ரவரி14) பரிசாக இந்த காரை வழங்கினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Huracán EVO Fluo கேப்ஸ்யூல் பிரகாசமான வண்ணங்கள் (படம்: https://www.lamborghini.com/)
இந்த சிறப்பு கார், ஐந்து வண்ணங்களில் வருகிறது. அவை, வெர்டே ஷாக் (பச்சை), அரான்சியோ லிவ்ரியா (ஆரஞ்சு), செலஸ்டே ஃபெட்ரா (நீலம்), அரான்சியோ டாக் (ஆரஞ்சு) மற்றும் கியாலோ கிளாரஸ் (மஞ்சள்) ஆகும்..
லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஷரத் அகர்வால் கூறுகையில், நிறுவனம் தனது V10 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான Huracán EVO Fluo காப்ஸ்யூலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் உற்சாகமாக உள்ளது என்று தெரிவித்தார். (படம்: https://www.lamborghini.com/)
Huracán தொடர் நுகர்வோர் பிரிவினரிடையே இந்திய சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. (படம்: https://www.lamborghini.com/)