தங்கத்தை சாப்பிடமுடியுமா? இனிமேல் இப்படி யாராவது கேப்பீங்க? தங்கத்தில் பிறந்தநாள் கேக்!

Lifestyle Of Actress Urvashi Rautela : தி லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலாவின் இந்த பிறந்த நாள் அவருக்கு மட்டுமல்ல, யாருக்குமே மறக்கமுடியாத பிறந்தநாளாக மாறிவிட்டது. அப்படி என்ன அதிசயம்? 

பிறந்த நாளுக்கு வெட்டும் கேக்கின் விலை என்ன என்பது தான் இந்த பிறந்தநாளின் ஆச்சரியத்தைக் கூட்டுகிறது. தங்கம் விற்கும் விலையில், தங்க முலாம் பூசிய கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்களின் கேள்விகள், ஊர்வசியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தொடரலாம்...

1 /7

3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா. நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இந்த கேக்கை பரிசளித்துள்ளார் பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் 

2 /7

தி லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுடேலா, தமிழில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். தமிழைத் தவிர கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ள  ஊர்வசி ரவுடேலா, பாலிவுட்டில் கிளாமர் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர்

3 /7

2013ம் ஆண்டு வெளியான 'சிங் சாப் தி கிரேட்' திரைப்படத்தில் அறிமுகமானவ ஊர்வசி ரவுத்தேலா, சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 என பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்

4 /7

சிங் சாப் தி கிரேட், படம் அறிமுகத்தைக் கொடுத்தது என்றால், பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங், இந்த காஸ்ட்லி கேக்கை வழங்கி, நடிகையின் பிறந்தநாளை மறக்கமுடியாத நாளாக மாற்றிவிட்டார்

5 /7

மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க முலாம் பூசப்பட்ட கேக் பரிசாக கிடைத்தால், அந்த நாளை யாரால் தான் மறக்கமுடியும்?  

6 /7

15 வயது முதல் மாடலிங் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊர்வசி ரவுடேலா 2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தை தட்டி சென்றவர்.   

7 /7

மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற பிறகு பாலிவுட்டில் நடிக்க ஊர்வசி ரவுதேலாவுக்கு வாய்ப்புகள் வந்தன