நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!

Tamil Nadu Political Leaders Cast Vote in Lok Sabha Elections 2024: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

Tamil Nadu Political Leaders Cast Vote in Lok Sabha Elections 2024: இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகின்றது. காலை முதலே வாக்குசாவடி மையங்களில் குவிந்த வாக்காளர்கள், வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் அதிக கூட்டம் சேர்வதற்கு முன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்த சில முக்கிய பிரமுகர்களின் புகைப்படங்களை இங்கே காணலாம். 

1 /8

தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள தனது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குகளை பதிவு செய்தார். 

2 /8

அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிலுவம்பாளையம் ஊராட்சி துவக்க பள்ளி, வாக்குச்சாவடி மையத்திற்கு அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா என தனதுகுடும்பத்தாருடன் வரிசையில் நின்று காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

3 /8

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்தினார்.

4 /8

குன்றத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்களித்தார்

5 /8

பா.ஜ.க செயற்குழு தலைவரான நடிகை குஷ்பு அவரது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

6 /8

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

7 /8

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

8 /8

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.