ஒன்பது நாட்கள் முப்பெரும் தீவியரை கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. நவராத்திரியில் அன்னையை அலங்காரம் செய்து வழிபடுவது ஒருபுறம் என்றால், கொலு வைத்தது வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம்.
அம்பாளை நினைத்து வழிபடும் நவராத்திரி திருவிழா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா சிவனுக்கு ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. ஆனால் அன்னைக்கோ ஒன்பது நாள் கொண்டாடப்படும் ராத்திரி நவராத்திரி.
Also Read | இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்...
ஒன்பது நாள் வைக்கப்படும் கொலு தசமியன்று, அதாவது விஜய தசமியன்று முடிவடையும்
மகாளய அமாவாசையன்று கொலு பொம்மை ஒன்றை சாஸ்திரத்திற்கு எடுத்து வைத்து கொலுவை தொடங்குவார்கள். அடுத்த நாள் முதல் நவராத்திரி களைகட்டும்
நவராத்திரியின் முதல் 3 நாள்கள் சிவனின் இடப்பாகத்தை கொண்டுள்ள பார்வதிற்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்து நவராத்திரியைத் தொடங்க வேண்டும்.
முதல் நாளில் பச்சை நிறம் மிகவும் உகந்தது எனபதால் பச்சை வண்ணத்தில் அன்னையை அலங்கரிக்கலாம்
வீட்டிற்கு வரும் பெண்களுக்கு வளையல் உட்பட அலங்கார பொருட்களை வெற்றிலை பாக்கு, குங்குமம், மஞ்சள் வைத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும்