ஹிமாசலப்பிரதேசத்தின் அழகை பிரதிபலிக்கும் சில முக்கிய நகரங்கள்..!!

ஹிமாச்சல் பிரதேசம் அதன் அழகிய மலைகள், பசுமையான புல்வெளிகள், மற்றும் புனிதமான ஆலயங்களுக்காக பிரபலம். இங்கு உள்ள சிறந்த சுற்றுலா இடங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மலை பிரதேசமான  ஹிமாச்சல பிரதேசம் சுற்றுலா செல்வதற்கான சிறந்த மாநிலம் என்றால் மிகையில்லை. இந்நிலையில், அங்கு தவறாமல் செல்ல வேண்டிய சில இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

1 /8

ஹிமாச்சல் பிரதேசத்தின் அழகை மிகவும் பிரதிபலிக்கும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்,  சுற்றுலா பயணத்தில் கண்டு களிக்க வேண்டிய இடங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 

2 /8

மணாலி கடல் மட்டத்திலிருந்து 6725 அடி உயரத்தில் உள்ளது. மணாலியின் பனி மூடிய மலைகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. மணாலி கோடையில் பார்க்க சிறந்த இடம்.

3 /8

குல்லு: ஹிமாச்சலத்தில் உள்ள குலு, அதன் அழகால் எப்போதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை இங்கு கண்டு மகிழலாம். குலு என்பது ரோஹ்தாங் கணவாய், பியாஸ் குண்ட் மற்றும் சந்திரதல் ஏரிக்கு பெயர் பெற்ற இடமாகும்.

4 /8

கசோல்: இந்த அழகான இடத்திற்கு மக்கள் ஆண்டு முழுவதும் வந்து கொண்டே இருப்பார்கள். உலகில் மிகவும் பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று. பார்வதி பள்ளத்தாக்கு மற்றும் பார்வதி நதியின் அழகு மக்களை ஈர்க்கும் மையமாக உள்ளது.

5 /8

மெக்லியோட்கஞ்ச்: சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடம். இது பௌத்த பக்தர்களின் முக்கிய மையமாகவும் உள்ளது. இங்கே நீங்கள் இமயமலையை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

6 /8

தர்மசாலா: நீண்ட விடுமுறைக்கு எற்ற இடமான,  இது கடல் மட்டத்திலிருந்து 1475 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  திபெத்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு பிரபலம், தலாய் லாமாவின் இல்லம் இங்கே உள்ளது.

7 /8

டல்ஹவுசி: காலனித்துவ நகரமான டல்ஹவுசியில், கிறிஸ்ட் சர்ச், பாப்டிஸ்ட் சர்ச் மற்றும் மங்கி பாயின்ட் உள்ளன.  பாராகிளைடிங்கிற்கான பிரபலமான இடமும் கூட.

8 /8

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம், அழகிய பாரம்பரிய கட்டிடங்கள், மால் சாலை, மற்றும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. சுற்றுலாவிற்கான மிகச்சிறந்த இடம்.