மகிழ்ச்சி, பண வரவிற்கு குறைவே இருக்காது... பங்குனி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

பங்குனி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களை எஞ்சியுள்ளன. பங்குனி மாதம் பிறப்பதற்கு முன்பாகவே, சுக்கிரன் மற்றும் புதன் தனது ராசிகளை மாற்றி உள்ளன. மேலும் சனி பகவான், மார்ச் மாதம் 18ம் தேதி உதயமாக இருக்கிறார்.

நவகிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படும் சூரியன் மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் பங்குனி மாதம். இந்நிலையில் பங்குனி மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /7

பங்குனி மாதத்தில் சூரியன் மீன ராசியில் சஞ்சரித்து, ராகு சுக்கிரன் ஆகியோருடன் இணைந்து பயணம் செய்ய இருக்கிறார். இந்த மாதத்தில் சூரிய கிரகணமும் நிகழ இருக்கிறது. இந்நிலையில், பங்குனி மாதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /7

மேஷ ராசி: பண வரவிற்கு குறைவு இருக்காது. திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் சிறப்பாக நடைபெறும். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உண்டு.

3 /7

ரிஷப ராசி: குடும்பத்தில் நிலவில் வந்த பிரச்சனைகள் நீங்கி தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவினால் பொருளாதார நிலை ஏற்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.

4 /7

புதிய வருமான ஆதாரங்கள் மூலம், வருமானம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். குடும்பத்தினருடன் பயணம் செல்வதற்கான திட்டம் தீட்டுவீர்கள்.

5 /7

தனுசு ராசியினருக்கு கடன் பிரச்சினைகள் நீங்கி, பொருளாதார நிலை மேம்படும். முதலீட்டில் கிடைக்கும் வருமானம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

6 /7

மீன ராசியினருக்கு ஆடம்பரம் வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.