ஆனி மாத ராசி பலன்.... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்..!!

ஆனி மாத ராசி பலன்: சூரியன் ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று சூரியன் மிதுன ராசிக்கு மாறப் போகிறார். சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில், சில ராசிகள் செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 15ம் தேதி மதியம் 12:27 மணிக்கு சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதன் காரணமாக மிதுனத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின்  சேர்க்கை உருவாகப் போகிறது. இந்நிலையில், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

1 /8

மேஷ ராசி: தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள், நிதி ஆதாயம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும். வேலை, வியாபாரம் சம்பந்தமாக புதிய யுக்திகளை மேற்கொள்பவர்கள், வெற்றிகளை பெறுவார்கள்.

2 /8

ரிஷபம் ராசி: நிறைய பணம் சம்பாதிப்பீர்கள், அதை உங்கள் குடும்பத்திற்காகவும் செலவிடுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகத்தில் உங்களின் நல்ல உழைப்பால் புதிய அடையாளத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  

3 /8

மிதுன ராசி:வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். வெலு விரைவாக வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆனி மாதத்தில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். மனைவியுடன் சுற்றுலாவும் செல்லலாம்.

4 /8

சிம்ம ராசி: புதிய திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பின் பலனை உங்கள் தொழிலில் பெறுவீர்கள், இதற்காக பணியிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவடையும்.

5 /8

துலாம் ராசி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வேலை செய்பவர்கள் பல புதிய சலுகைகளைப் பெறலாம். புதிய வேலை தேடுபவர்கள் தங்கள் மன விருப்பப்படி புதிய வேலை கிடைக்கும். வியாபார விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். அன்னியச் செலாவணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிதும் ஆதாயம் அடைவார்கள்.  

6 /8

புத ஆதித்ய யோகம்: ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால்  திரிகிரஹி யோகம், புத - ஆதித்ய யோகம், சுக்ராதித்ய யோகம் உள்ளிட்ட சில சுப யோகங்கள் உருவாகிறது. புதன் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளதால் புதனும் சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது. 

7 /8

சுக்ர ஆதித்ய யோகம் : சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுனத்திற்கு சென்றுள்ள நிலையில், ஜூன் 14ல் சூரியன் மிதுன ராசிக்குள் நுழையும் போது சூரியனும் சுக்கிரனும் இணைந்து, சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. மேலும், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைந்து திரிகிஹி யோகம் உருவாகிறது.  

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.