லியோ படத்தை வெளியிடுவதற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்!

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

1 /5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா நடித்திருக்கும் லியோ படமானது நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ளது.  

2 /5

இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  

3 /5

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதங்களை வைத்தார்.  

4 /5

லியோ திரைபடமானது நாடு முழுவதும் ஆயிரத்து 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.   

5 /5

இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும்  உத்தரவிட்டுள்ளார்.